Thursday, February 19, 2026

மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23 வது படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

Related News

Latest News