Tuesday, July 29, 2025

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 28 வயதான இளம் பெண் சிகிச்சைக்காக வந்த போது , யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News