Thursday, February 19, 2026

ஓ.டி.டியில் வெளியாகும் ‘படை தலைவன்’ திரைப்படம்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த மாதம் 13-ந் தேதி வெளியான படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்தினை இயக்குனர் அன்பு இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை கொண்டுவந்துள்ளனர். விஜயகாந்த் வரும் காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

படை தலைவன் படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘படை தலைவன்’ திரைப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News