Thursday, July 3, 2025

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,020 க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065 க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news