Thursday, February 19, 2026

‘மாநாடு 2’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜெ சூர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த இத்திரைப்படம் சிம்புவிற்கும் ஒரு கம்பேக் படமாக அமைந்தது.

இதையடுத்து வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 படத்தின் அப்டேட்டைக் கேட்டு வந்த ரசிகர்கள், அடுத்ததாக மாநாடு 2 எப்போது வரும் என்றும் கேட்கத் தொடங்கினர்.

இந்நிலையில் மாநாடு 2 படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தனது இரண்டு படங்களான ‘மங்காத்தா’ மற்றும் ‘மாநாடு’ கதாபாத்திரங்களை மீண்டும் இணைக்கும் மற்றொரு திட்டமும் இருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

படம் வெளியாகி 4 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தற்போது மாநாடு 2 படத்திற்கான பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News