சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், ஒரு பவுன் ரூ.73,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.9,070 க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.