Tuesday, June 24, 2025

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பெரும்பாலும் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று (24-06-2025) ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து ரூ.9,155-க்கும், ஒரு பவுன் (22 காரட்) ரூ.600 குறைந்து ரூ.73,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், பார் வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news