பவன் கல்யாண் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு

மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பவன் கல்யாண் செல்ல இருந்த விமானமும் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News