இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2வது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு குடும்பத்தின் தலைவி மட்டுமே இதற்கு விண்ணபிக்க வேண்டும் என்பது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளை இருக்கும் என்றால், அவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

Latest News