இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவி.., கணவன் செய்த கொடூர செயல்

கர்நாடகா மாநிலம் மங்களூரில் அளவிற்கு அதிகமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியை அவரின் கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மங்களூரில் உள்ள ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (42). இவருடைய மனைவி ரேகாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் கணவன் கணேஷ், மனைவி ரேகா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது. அங்கு போலீசார் அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கணேஷ் பணி முடித்து இரவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரேகா ரீல்ஸ் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து, கோபமடைந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் மீண்டும் சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கணேஷ் அரிவாளை எடுத்து ரேகாவின் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனால் அந்த இடத்திலேயே ரேகா துடிதுடித்து இறந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related News

Latest News