கடந்த 12-ஆம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 டிரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். இதில் 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் மூன்று மூத்த அதிகாரிகளை உடனடியாக மாற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஊழியர் பணி ஒதுக்கீடு பிரிவிலிருந்து நீக்கவும் ஏர் இந்தியாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.
