தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக உயரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே மீண்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், ” தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 1-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்” எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News