தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரத்து : பயணிகள் அவதி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்துக்குப் பின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம்(AI-159) தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கவிருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related News

Latest News