“விமானத்தில் ஏதோ சரியில்லை”.., விபத்தை முன்கூட்டியே கணித்த பயணி

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். 

இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் யாஸ்மின் வோரா என்ற பெண் பயணி லண்டனில் வசிக்கும் தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.  பின்னர், யாஸ்மின் தனது கணவரை தொலைபேசியில் அழைத்து விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், விமானத்தில் ஏதோ சரியில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினின் கணவரோ, சிறிது நேரத்தில் ஏசியை இயக்கிவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. 

Related News

Latest News