கர்நாடகாவில் ஆரஞ்சு அலர்ட் : பள்ளிகளுக்கு விடுமுறை

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, ஜூன் 12, 2025 அன்று அங்கன்வாடி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் மீனவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மையங்கள், நிவாரண முகாம்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News