ரெய்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை – ஜன்னல் வழியாக பணத்தை தூக்கிய வீசிய நபர் கைது

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சிப் பணிகள் துறையின் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் பைகுந்த் நாத் சாரங்கி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்த அவர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசியுள்ளார். இதனைக் கண்ட அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News