இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,600 க்கும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,995க்கு செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News