தமிழில் வெளியான ‛கைதி, விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சாம் சிஎஸ். இந்நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கடந்த 2021 ஆண்டு தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு படத்திற்காக, , இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸிடம் ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சாம் சிஎஸ் படத்திற்கு இசையும் தராமல், பணத்தையும் திரும்பி தராமல் இழுத்தடிக்கிறார் என கூறி சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.