வசூலில் 3 வது இடத்தை பிடித்த மோகன்லால் திரைப்படம்

தருண் இயக்கத்தில் கடந்த ஏப். 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘துடரும்’. இப்படத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழில் ‘தொடரும்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இதுவரை ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் அசத்தியுள்ளது. ‘எல் 2: எம்புரான்’ (ரூ.265.5 கோடி), மஞ்சும்மள் பாய்ஸ் (ரூ.240 கோடி) ஆகிய படங்களின் வசூலை அடுத்து மூன்றாவது இடத்தில் துடரும் உள்ளது.

Related News

Latest News