Friday, June 6, 2025

“வீர தீர சூரன் 2” படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது – நீதிமன்றம் தீர்ப்பு

விக்ரமின் 62-வது படம் வீர தீர சூரன் படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் ‘விடாமுயற்சி’ படம் காரணமாக தள்ளிப்போனது.

இதையடுத்து அப்படம் மார்ச் 27ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்களையும் படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு நாள் முன்னர், அப்படத்தில் முதலீடு செய்த B4U என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் டெல்லி ஐகோர்ட்டு படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

இப்படத்தில் முதலீடு செய்திருந்த B4U நிறுவனம் ஓடிடி உரிமையை தன் வசம் வைத்துள்ளது. ஓடிடி விற்பனை நடைபெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை, அதற்கான நஷ்ட ஈட்டைத் தயாரிப்பாளர் தர வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news