Friday, July 4, 2025

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையின் 15 மண்டலங்களிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மின்சார வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னையின் 15 மண்டலங்களிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 89 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விரைவில் அனைத்து இடங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news