அகமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டிக்காக 10 மைதானங்கள் அமைக்கப்படும் – அமித்ஷா தகவல்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 316.82 கோடி ரூபாயில் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான, பயிற்சி மைய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டு, பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய அவர், 2036 ஆம் ஆண்டில், ஒலிம்பிக் போட்டிகளை நடந்த அகமதாபாத்தில் 10 மைதானங்கள் அமைக்கப்படும் என கூறினார். குஜராத் மாநில பட்ஜெட்டில் விளையாட்டுக்காக இந்தாண்டு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

Latest News