Sunday, February 22, 2026

5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறுதேர்வில், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related News

Latest News

error: Content is protected !!