Sunday, December 28, 2025

ரிலீஸுக்கு முன்னே துணிவை பின்னுக்கு தள்ளிய வாரிசு!

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்களுக்கு போஸ்டர், பேனர், cut out வைத்து கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இரு படங்களின் pre release பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் திரையரங்கு உரிமை, OTT உரிமை மற்றும் சர்வதேச நாடுகளில் வெளியீடு உள்ளிட்ட pre பிசினஸ் வசூல் 194 கோடிகளாக கணக்கிடப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், வாரிசு படத்தின் ஒட்டுமொத்த ரிலீசுக்கு முந்தய வசூல் 295 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், pre ரிலீஸ் வர்த்தகத்தில் துணிவை விட நூறு கோடிகள் அளவிற்கு, வாரிசு முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது.

இரு வெவ்வேறு கதைக்களங்களை கொண்டுள்ள படங்களில் box office வசூல் வேட்டையில் வெற்றி பெற போவது எந்த படம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News