மத்திய அரசின் உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பதவியை நிராகரித்தார் முகுல் ரோஹத்கி

268

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மறுத்துவிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து மேலும் 3 மாதங்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், கே.கே.வேணுகோபாலின், பதவிக்காலம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், அடுத்த தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி பதவியேற்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த முகுல் ரோஹத்கி, தனது முடிவை எடுப்பதற்கு பின்னால் எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 14-வது தலைமை வழக்கறிஞராக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் வரை பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.