ஒரு பாட்டு ஷூட் பண்ண 25 நாள் ஆச்சா?

கல்கியின் வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது.

அண்மையில் வெளியான டீசரும் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, போஸ்டர்கள், மேக்கிங் வீடியோ, அப்டேட் என படக்குழுவினரும் புதிய தகவல்களை வெளியிட்டு மக்களை தொடர்ந்து ஈடுபாட்டுடன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாட்டில் 300 நடனக்கலைஞர்கள் நடனமாடி இருப்பதாகவும், இந்த பிரம்மாண்டமான பாடலின் படப்பிடிப்பு 25 நாட்கள் வரை நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்கள் நடித்துள்ள, பல விறுவிறுப்பான அம்சங்களை கொண்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related News

Latest News