ரஷ்ய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களை முடக்க உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு பிறகு , ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு ஏற்கனவே களமிறங்கியுள்ளது. அனானமஸ் என்று பெயர் கொண்ட இந்த ஹேக்கிங் அமைப்பில் உலகம் முழுவதும் உள்ள ஹேக்கர்களின் வலைதள அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் அரசு இணையதள பக்கங்கள், ரஷ்ய ஊடகங்கள், ரஷ்ய நிறுவனங்கள் என ரஷ்யாவுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகள் மீதும் இந்த அமைப்பு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் , ரஷ்ய அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்க உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவை எதிர்க்கொள்ள உக்ரைன் அரசு ஹேக்கர்களின் உதவியை நாடியுள்ள நிலையில் , இது குறித்து தெரிவித்து உள்ள ரஷ்யா இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.