Thursday, February 19, 2026

வெறும் 800 வார்த்தைகள்., நாட்டின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை., எப்போது நடந்தது தெரியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026–27 நிதியாண்டிற்கான தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த சூழலில், இதுவரை இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரைகளில் மிகக் குறைந்த நேரம் மற்றும் மிக நீண்ட நேரம் நீடித்த உரைகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகக் குறுகிய பட்ஜெட் உரையை முன்னாள் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 1977 ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். அவர் வெறும் 800 வார்த்தைகள் கொண்ட இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே உரையாற்றினார். இதுவே இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகச் சுருக்கமான பட்ஜெட் உரையாக பதிவாகியுள்ளது.

இதற்கு மாறாக, மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியவர் நிர்மலா சீதாராமனே ஆவார். அவர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று, சுமார் 2 மணி 40 நிமிடங்கள் நீடிக்கும் நீண்ட உரையை நிகழ்த்தி சாதனை படைத்தார்.

Related News

Latest News