65 வயது பாட்டியைக் காதலித்துத் திருமணம் செய்த 85 வயது தாத்தா

284
Advertisement

65 வயது பாட்டியை 85 வயது தாத்தா காதலித்துத் திருமணம் செய்த கலகலப்பான நிகழ்வு இணையதள வாசிகளைக் கவர்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலம், மைசூரு நகரிலுள்ள உதயகிரி கௌசியா நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 85 வயதான இவர் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி குர்ஷித் பேகம் என்ற மனைவியும், 9 பிள்ளைகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, தனித்குடித்தனம் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு முஸ்தபாவின் மனைவி குர்ஷித் பேகம் உடல்நலக்குறைவால் காலமானார். அதன்பின், முஸ்தபா தனிமையிலேயே வசித்துவரத் தொடங்கினார். தனிமை அவரை வாட்டத் தொடங்கியது. அவரது மனம், தனக்கொரு துணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று உணரத் தொடங்கியது.

Advertisement

இந்தச் சூழலில், தனது வீட்டருகே சில வாரங்களுக்குமுன்பு கணவரை இழந்து தனிமையில் வசித்துவரும் 65 பாட்டியான பாத்திமா பேகத்தை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கினர்.

அப்போது தயங்கித் தயங்கி ஃபாத்திமாவிடம், உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று முஸ்தபா கேட்டுள்ளார். அதற்கு ஃபாத்திமாவும் உடனடியாகப் பச்சைக்கொடி காட்டிவிட்டார். இதனால், தனிமை உணர்வு நீங்கி சந்தோஷக் கனவில் மிதக்கத் தொடங்கினார் முஸ்தபா.

ஆனாலும், இந்தத் திருமணத்துக்கு தங்கள் குழந்தைகளின் சம்மதம் என்பதை உணர்ந்த முஸ்தபா, அவர்களிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்தார். மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என 150 பேரும் முஸ்தபாவின் திருமணத்துக்கு முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, முஸ்தபாவின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் 150பேர் உள்பட 200பேர் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மணமக்களின் பாதங்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

தம்பதியாகியுள்ள முஸ்தபா- ஃபாத்திமா பேகம் இருவரும் தங்களின் இனிமையான புது வாழ்வைத் தொடங்கியுள்ளனர்.

கொள்ளுப்பேரன்கள் வந்துவிட்ட பிறகும் திருமணம்செய்துகொண்ட இந்தத் தம்பதியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : சுவாரஸ்ய  சம்பவம்!! – வவுனியா நெற்