தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுரங்கம் கட்டுமானப் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 8 பேர் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.