Monday, December 8, 2025

79 வயது டிரம்புக்கு 65 வயசு இதயமாம்! அமெரிக்க டாக்டரின் பகீர் ரிப்போர்ட்! உண்மையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதைக் கேட்டால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். 79 வயதான டிரம்பின் உடல்நிலை, “விதிவிலக்கான ஆரோக்கியத்துடன்” (exceptionally healthy) இருப்பதாக அவரது மருத்துவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, அந்த மருத்துவ அறிக்கையின் ஹைலைட்டே இதுதான்: டிரம்பின் இதய வயது (Heart Age), அவரது உண்மையான வயதை விட 14 வயது குறைவாம்! அதாவது, அவருக்கு 65 வயது இளைஞரின் இதயம் இருக்கிறதாம். இந்த அறிக்கை, வெள்ளை மாளிகையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், டிரம்பின் கணுக்கால் வீக்கம், கையில் காயம் என அவரது உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிக வயதான அதிபரான டிரம்ப், தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.எனவே தான் இந்த திடீர் சோதனை.

சோதனையில், “டிரம்ப், சிறந்த இருதய, நுரையீரல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளுடன் இருக்கிறார். அவரது வரவிருக்கும் மத்திய கிழக்கு பயணத்திற்கு அவர் முழுத் தகுதியுடன் இருக்கிறார்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு முழு உடல் பரிசோதனை செய்த நிலையில், இந்த அவசர பரிசோதனையும், அதன் முடிவுகளும், அமெரிக்க அரசியல் வட்டாரத்தில், உண்மையிலேயே அவர் ஃபிட்டாக இருக்கிறாரா, இல்லை இது ஒரு அரசியல் ஸ்டன்ட்டா? என்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Related News

Latest News