டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 7 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி – பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 7 பேர் அக்கட்சியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.