Wednesday, March 26, 2025

வேகமாக பரவும் ஜி.பி.எஸ் நோய் : 7 பேர் பலி, 167 பேருக்கு பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் குய்லின் பார் சிண்ட்ரோம் எனப்படும் அரிய வகை நரம்பியல் நோய் பரவி வருகிறது. மனிதர்களின் நரம்பு மண்டலம், மூளை ஆகியவை இந்த நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நோயினால் இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் இது வரை பலியாகியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை 48 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 21 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

Latest news