உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு மீட்புப் பணியில் 65 பேர் ஈடுபட்டுள்ளனர்.