Monday, February 10, 2025

இந்தியாவில் 55% லாரி ஓட்டுனர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை : அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள லாரி ஓட்டுநர்களில் 55.1% பார்வை குறைபாடு இருப்பதாக ஐஐடி நிறுவனம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களிடம் டெல்லி ஐஐடி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் 53.3 விழுக்காடு பேருக்கு தூரப்பார்வை பிரச்சனை இருப்பதாகவும், 46.7 விழுக்காடினருக்கு கிட்டப்பார்வை பிரச்சனை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 44.3 விழுக்காடு ஓட்டுநர்களின் உடல் எடை அதிகமாக இருகிறது. 57.4 விழுக்காடு பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Latest news