54 வயதாகியும் திருமணம் குறித்த கேள்விக்கு விருப்பமில்லாமல் பேசும் SJ.சூர்யா.

201
Advertisement

தமிழ்  சினிமாவில்  முன்னணி  நட்சத்திரங்களில் ஒருவராக  எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார், இவர்  நடிப்பில்  அடுத்ததாக  பொம்மை  திரைப்படம்  வருகிற  16 ஆம் தேதி வெளியாகிறது.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது, இவை  மட்டுமின்றி  பிரம்மாண்டமாக   உருவாகும்  ஒரு புதிய படத்தில்  எஸ்.ஜே. சூர்யா  நடிக்கிறாராம்.

இந்நிலையில் 54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல முறை எஸ்.ஜே. சூர்யா குறித்து காதல் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது, இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து எஸ்.ஜே. சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்பது போல் மழுப்பியஒரு பதிலை கூறியுள்ளார். அதில் சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள் தான் முக்கியம் என்பது போல் கூறியுள்ளார்.