நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விலகி திமுகவில் இணைந்தனர்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் 50 பேர் விலகியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ் மற்றும் சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி அவருடன் பயணித்த கார்த்திக், சந்தோஷ், சிவராமன், மணிவேல், ரமேஷ், விஜய், விஜயகுமார், P.ரமேஷ், ராஜ்குமார், தினேஷ், சேரன், K.விஜய் விக்னேஷ், பழனி, குமார், உமா, மீனா, அலமேலு, பழனியம்மாள் உட்பட 50-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொண்டனர்.