குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்புக்கான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டில் உள்ள 30 மாநில முதல்வர்களில் 12 பேர் (40%), தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 89 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல்வர். அடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 47 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – 19 வழக்குகள்
கர்நாடக முதல்வர் சித்தராமையா – 13 வழக்குகள்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் – 5 வழக்குகள்
மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர ஃபட்னவீஸ் – 4 வழக்குகள்
இமாசல் முதல்வர் சுக்வீந்தர் சிங் – 4 வழக்குகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன் – 2 வழக்குகள்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் – 1 வழக்கு
மேலும் இந்த தரவுகளில், 10 மாநில முதல்வர்கள் மீது, கொலை முயற்சி, ஆள் கடத்தல், லஞ்ச முறைகேடு உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.