சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லக்கூடிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மற்றும் ஹைதராபாத் செல்லக்கூடிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்களில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக காரணங்களாலும், அந்தந்த விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்துள்ளன. மேலும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.