தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்ரல் 21 வரை arasubus.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்கலுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.