கிருஷ்ணகிரி அருகே, பள்ளி சிறுமியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்னச்சாமி, ஆறுமுகம் மற்றும் பிரகாஷ் ஆகிய ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில், மூவரும் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.