சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் பைக்கில் கல்லூரிக்கு சென்று வந்த தலித் மாணவனின் கைகளை வெட்டி அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவனை சாதிவெறி பிடித்த 3 நபர்கள் எங்கள் முன் எப்படி நீ வாகனத்தை ஓட்டி செல்லலாம் என்று கூறி, அவரது இரு கைகளையும் வெட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.