சேலம் அரிசிபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். நீண்ட காலமாக வெள்ளி தொழில் செய்து வரும் அருள் புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளார். பல லட்சம் கடன் பெற்று புதிய வீடு கட்டிய பால்ராஜ் அதில் ஒரு பகுதியாக வெள்ளி பட்டறையும் வைத்து தொழில் புரிந்து வந்தார்.
தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டுக் கடன் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனிடையே வெள்ளி கொலுசு தயாரிப்பில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து அதை திரட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் மனம் உடைந்த வெள்ளி பட்டறை தொழிலதிபர் பால்ராஜ் அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் நேற்று இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அருள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.