Monday, December 23, 2024

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (டிச.23) காலை 10.44 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

Latest news