கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் வங்கதேசத்தைச் சேர்ந்த 34 பேர் பிடிபட்டிருப்பதாக கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 27 பேரும் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.