நாட்டில் காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 746 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை காவல் ஆய்வாளர்கள் துரைகுமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு, காவல்துறையில் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 21 பேருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.