வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தேவகாரன்பட்டியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. 75 வயதான மூதாட்டியான இவரை, கடந்த மாதம் 22 ஆம் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றன.
புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், பாப்பாத்தி குட்டை கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த எழிலரசன் ஆகியோருடன் இரு சிறுவர்களை கைது செய்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து இரண்டரை சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஒரு சிறாரை வலை வீசி தேடி வருகின்றனர்.