Saturday, February 15, 2025

நாகையில், மளிகைக் கடையை சூறையாடிய 17 வயது சிறுவன் கைது

நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு சென்ற சிறுவன், பணம் கொடுக்காமல் மளிகைப் பொருள்கள் கேட்டுள்ளான். அதற்கு கடை உரிமையாளர் பாஸ்கரன் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், பொருட்களை உடைத்து கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளான்.

இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியைச்சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன் ஆஜர்ப்படுத்தி சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

Latest news