Sunday, February 16, 2025

விண்வெளியில் சேமித்த விந்தணுவுக்கு 168 எலிக்குட்டிகள்

6 ஆண்டுகளாக விண்வெளியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த
எலியின் விந்தணுக்கள் மூலம் 168 எலிக்குட்டிகள் பிறந்துள்ளன.

ஜப்பான் யாமானாஷி பல்கலைக் கழகம் இந்த சாதனையை
நிகழ்த்தியுள்ளது. விண்வெளியிலுள்ள கதிர்வீச்சால் உயிரணுக்களில்
மாற்றம் ஏற்படுமா? அதன்மூலம் உருவாகும் உருவாகும் புதிய
உயிரினங்களில் பாதிப்பு ஏற்படுமா என்பது போன்ற விவரங்களைக்
கண்டறிய இந்தப் பல்கலைக் கழகம் விரும்பியது.

இதற்காக, 2013 ஆம் ஆண்டு 3 பெட்டிகளில் தலா 48 குப்பிகளில்
எலிகளின் உறைந்த, உலர்ந்த விந்தணுக்களை சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பியது.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் தொகுப்பும், இரண்டாண்டுகள்
கழித்து இரண்டாவது தொகுப்பும், ஆறு ஆண்டுகள் கழித்து மூன்றாவது
தொகுப்பும் பூமிக்குத் திரும்பின.

பூமிக்குத் திரும்பியதும் அவை நீரிழப்பு செய்யப்பட்டன.
அதன்விளைவாக 168 எலிக்குட்டிகள் பிறந்தன. இவையெதுவுமே
விண்வெளிக் கதிர்வீச்சால் பாதிக்கப்படவில்லை. சாதாரணமாகப்
பூமியில் பிறக்கும் எலிகளைப்போலவே தோற்றத்திலும் அளவிலும்
உள்ளன.

இந்த விசயம் விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றிக் கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள். ”விண்வெளிப்
பாதையில் 200 ஆண்டுகள்வரை விந்தணுக்களை சேமிக்க
முடியும். இதேபோல, மனிதர்களின் உறைந்த சினை முட்டைகள்
மற்றும் கருவுற்ற கருக்கள் ஆகியவற்றை விண்வெளிக்கு
எடுத்துச்சென்று கதிர்வீச்சுகளுக்கு உட்படுத்த உள்ளோம்”என்று
கூறியுள்ளனர்.

விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சபாஷ்

Latest news