பட்டுக்கோட்டையில் இன்று காலை மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு – தரம் குறைவான, சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 167 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது – 5 மீன் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அதிரடி நடவடிக்கை
பட்டுக்கோட்டை மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று காலை மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் 5 மீன் கடைகளில் தரம் குறைவான, சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 167 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 5 மீன் கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.